சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்!

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல்கள் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த திரைப்படம் 151 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்றும் அதாவது 2 மணி நேரம் 31 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டதாக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டரை மணி நேரம் என்பது சரியான ரன்னிங் டைம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.