close
Choose your channels

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்!

Wednesday, March 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், டி இமான் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் மார்ச் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது தெரிந்ததே. கடந்த 2019ஆம் ஆண்டு சூர்யா நடித்த ‘காப்பான்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸான நிலையில் அதன்பின் மூன்று ஆண்டுகள் கழித்து தற்போதுதான் சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ’யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் என்பது 150 நிமிடங்கள் அதாவது இரண்டரை மணி நேரம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.