நவரசா: சூர்யாவின் 'கிட்டார் கம்பி மேல் நின்று' விமர்சனம் கெளதம் மேனனின் காதல் கவிதை

  • IndiaGlitz, [Friday,August 06 2021]

இசை அமைப்பாளரான சூர்யாவுக்கு லண்டன் சென்று இசையில் மிகப் பெரிய இசை மேதை ஆக வேண்டும் என்ற ஆசை. ஆனால் அவருடைய தாயார் அவருடன் வர மறுப்பதை அடுத்து தன்னுடைய ஆசையை தள்ளி போட்டுக் கொண்டிருக்கிறார். லண்டன் சென்று அதிகமாக அளவு இசையை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இசையில் சாதனை செய்ய வேண்டும் என்றும், இசை விருதுகளை பெற வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருக்கிறது. அதற்காக அவர் ஓப்பன் டிக்கெட் வாங்கி வைத்து அம்மாவின் அனுமதிக்காக காத்திருக்கிறார்

இந்த நிலையில் தனது இசையில் பாடுவதற்காக வரும் பெண் ஒருவரை பார்க்கிறார். அவருக்கும் அதே போல் இசையில் ஆர்வம் உண்டு என்பதும், லண்டன் செல்ல வேண்டும் என்பதும் தனது கொள்கையாக இருக்கிறது என்பதை அவரிடம் பேசும்போது தெரிந்து கொண்டு ஆச்சரியப்படுகிறார். இருவருக்கும் ஒரே விதமான ஆர்வம், ஆசை இருப்பதை பார்த்ததும் இருவருக்கும் இடையே ஒரு பிணைப்பு ஏற்படுகிறது

இந்த நிலையில் அடுத்த சிலமணி நேரங்களில் சாலையில் தற்செயலாக பிரக்யாவை பார்க்கும் சூர்யா அவரை அவருடைய வீட்டிற்கு டிராப் செய்ய அழைக்கின்றார். அந்த இரண்டு நிமிட உரையாடல் காதலின் ஆரம்பம். இதனையடுத்து வீட்டின் அருகே சென்றவுடன் இருவரும் சாலையில் நின்று கொண்டு பேசும் வசனங்கள். ஒருவருக்கொருவர் தங்களுடைய மனதில் உள்ள எண்ணங்களை பரிமாறிக் கொள்ளும் காட்சிகள், மிகவும் டீசண்டாக தனது காதலை பிரக்யா வெளிப்படுத்தும் காட்சிம் அதற்கு பதில் சொல்லும் சூர்யாவின் நேர்த்தி என ஒரு காதல் கவிதையை அந்த பத்து நிமிடத்தில் இயக்குநர் கவுதம் மேனன் எழுதி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்

அதன் பின்னர் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கொண்டு இருவரும் பேசும் காதல் வசனங்களும், ஒருவரை ஒருவர் தங்களது காதலை வெளிப்படுத்திக் கொள்ளும் அழகையும் பார்க்கும் போது ஒரு மினி காதல் கவிதையை பார்த்த மாதிரி இருக்கிறது. இந்த 45 நிமிட குறும்படத்தில் ஐந்தாறு பாடல்கள் மற்றும் அதிகப்படியான ஆங்கில வசனங்கள் ஆகியவை மட்டுமே சிறு குறைகள் தெரிந்தாலும் மொத்தத்தில் கௌதம்மேனன் ஸ்டைலில் ஒரு அற்புதமான காதல் கவிதையை பார்த்த திருப்தி எழுகிறது.

சூர்யாவை ஒரு ரொமான்ஸ் நடிகராக பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் மீண்டும் ஒரு ’வாரணம் ஆயிரம்’ படத்தை பார்த்தது போலவே உணர்வு. சூர்யாவின் ரொமான்ஸ் நடிப்பை வெளிப்படுத்திய கெளதம் மேனனுக்கு பாராட்டுக்கள், பிரக்யா வாயால் பேசும் வசனத்தைவிட கண்களால் பேசும் வசனம் தான் அதிகம். கார்த்திக்கின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் எல்லாமே மிக அருமையாக திரைக்கதையுடன் பொருந்தி இருப்பது சிறப்பு. மொத்தத்தில் ‘கிட்டார் கம்பி மேல் நின்று’ ஒவ்வொருவரின் மனதிலும் நிற்கும்.

More News

நவரசா: அரவிந்த்சாமி இயக்கத்தில் 'ருத்ரா' பெண்ணின் பெருமையை கூறிய அரவிந்த்சாமி

மணிரத்னம் தயாரிப்பில் உருவான 'நவரசா' என்ற ஆந்தாலஜி திரைப்படத்தின் அடுத்த பகுதியான'ரௌத்திரம்' என்ற பகுதியின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

நவரசா: விஜய்சேதுபதியின் 'எதிரி'யின் எதார்த்தமான கதை!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'நவரசா' என்ற ஆந்தாலஜி திரைப்படத்தின் முதல் பகுதியான 'எதிரி' என்ற பகுதியின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம் 

கர்ப்பம் தரிக்க எந்த பொசிஷன்  சரியானது.....? தம்பதிகள் எத்தனை முறை உடலுறவு வைத்துக்கொள்ளலாம்....!

சில தம்பதிகளுக்கு  ஒருமுறை உடலுறவு வைத்துக்கொண்டாலே கருத்தரிக்கும் வாய்ப்புள்ளது.

தமிழகத்திலிருந்து கனிமங்களை சுரண்டும் வளக்கொள்ளையர்களை ஒடுக்குங்கள்....! சீமான் வேண்டுகோள்....!

நம் தமிழகத்திலிருந்து கனிம வளங்கள் சுரண்டப்பட்டு, கேரளாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

சிம்புவின் பாரதியார் கவிதை டைட்டில் அறிவிப்பு

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்