'தல கோதும் இளங்காத்து: சூர்யாவின் 'ஜெய்பீம்' படத்தின் சூப்பர் பாடல்!

  • IndiaGlitz, [Monday,October 25 2021]

பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய ‘ஜெய்பீம்’ திரைப்படம் வரும் நவம்பர் 2ஆம் தேதி அன்று அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் சில பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்த பாடல் வெளியாகி உள்ளது. ’தல கோதும் இளங்காத்து என்று தொடங்கும் இந்த பாடலை சீன் ரோல்டன் கம்போஸ் செய்ய பிரதீப்குமார் பாடியுள்ள இந்த பாடலை யுகபாரதி, ராஜூ முருகன் மற்றும் அறிவு எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த பாடல் தற்போது இணையதளத்தில் வைரலாக வரும் நிலையில் இந்த மெலோடி பாடலை சில அற்புதமான வரிகளை தற்போது பார்ப்போம்

தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்
மரமாகும் விதையெல்லாம் வாழ சொல்லித்தரும்

கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத நாளும் இங்கு இல்லை

ரொம்ப பக்கம் தான் பக்கம்தான்
நிழல் நிக்கிதே நிக்கிதே

உன்னை நம்பி நீ முன்ன போகையில
பாதை உண்டாகும்

நிக்காம முன்னேறு, கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு, அன்பால நீ கைசேரு

சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவும் ஃபிலோமினா ராஜ் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.