close
Choose your channels

ஜாவா தீவில் 'காப்பான்' படப்பிடிப்பு! அட்டகாசமான புகைப்படம் வெளியீடு

Thursday, April 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'காப்பான்' திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது ஒரு பாடலின் படப்பிடிப்பிற்காக இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா தீவிற்கு படக்குழுவினர் சென்றுள்ளனர்.

இந்த தீவில் உள்ள அழகிய இயற்கை லொகேஷன் பின்னணியில் சூர்யா, கே.வி.ஆனந்த் உள்பட படக்குழுவினர் உள்ள புகைப்படம் ஒன்றை இயக்குனர் கே.வி.ஆனந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த லொகேஷனில் படமாக்கப்படும் பாடல் காட்சி கண்ணுக்கு விருந்தளிக்கும் என்பது இந்த ஒரு புகைப்படத்தை பார்த்தாலே தெரிகிறது. இந்த பாடலுக்கு ஷோபி மாஸ்டர் நடனப்பயிற்சி அளிக்கின்றார்.

வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகும் 'காப்பான்' படத்தில் சூர்யா, மோகன்லால், சாயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பூர்ணா, பிரேம், தலைவாசல் விஜய், உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.