பறந்து பறந்து ஸ்டண்ட் போடும் திஷா பதானி, 'கங்குவா' படத்திற்காகவா? வேற லெவல் வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,April 29 2023]

சூர்யாவின் 42 வது திரைப்படம் ‘கங்குவா’ என்ற திரைப்படத்தில் நாயகி ஆக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி பறந்து பறந்து ஸ்டாண்ட் போடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘கங்குவா’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக திஷா பதானி நடித்து வருகிறார் என்பதும் அவரது காட்சிகள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திஷா பதானிக்கு 57 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப் பெரிய அளவில் வைரல் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் ஸ்டண்ட் கலைஞருடன் பறந்து பறந்து ஸ்டண்ட் போடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். சூர்யாவின் ‘கங்குவா’ படத்திற்காக இந்த பயிற்சியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் அவர் பாலிவுட் உருவாகி வரும் ’யோகா’ என்ற அதிரடி ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் பிரபாஸ், அமிதாபச்சன், தீபிகா படுகோனே, நடித்து வரும் ’ப்ராஜெக்ட் கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் குருமூர்த்தி.. ஒரு லட்சம் கோடிக்கு சொந்தக்காரன்: 'பிச்சைக்காரன் 2' டிரைலர்

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' என்ற திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்தன

அந்தரத்தில் பறந்து ஆக்சன் காட்சியில் சமந்தா.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகை சமந்தா அந்தரத்தில் பறந்து ஆக்சன் காட்சிகளில் நடித்த காட்சிகளின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள்  வைரலாகி வருகிறது. 

கமல் சார்கிட்ட ஆட தெரியாதுன்னு பொய் சொல்லி அடி வாங்குனேன் - சுலக்ச்சனா

தமிழில் 1980 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சுலக்ச்சனா. இவர் தான் தன்னுடைய இரண்டரை வயதில் இருந்து நடித்து வருகிறார்.

'ஆதிபுருஷ்' படத்தில் சீதை கேரக்டர்.. பிரபல நடிகையின் மாஸ் போஸ்டர்..!

பிரபாஸ் நடித்து வரும் 'ஆதிபுருஷ்' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் சீதையாக நடித்து வரும் கீர்த்தி சனோன் மாஸ் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில்

'பொன்னியின் செல்வன் 2' முதல் நாளே இத்தனை கோடி வசூலா? ஆச்சரியத்தில் திரையுலகினர்..!

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் இந்த