அடுத்தகட்ட பணியை தொடங்கிய சூர்யா.. ரிலீசை நோக்கிய 'கங்குவா' திரைப்படம்..!

  • IndiaGlitz, [Wednesday,February 21 2024]

நடிகர் சூர்யா நடித்து வந்த ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக தகவல் வெளியானது. இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா டப்பிங் பேசும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர் டப்பிங் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.. சூர்யாவின் டப்பிங் பணிகள் முடிந்த பிறகு இந்த படத்தில் நடித்த மற்ற நட்சத்திரங்களின் டப்பிங் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இதையெல்லாம் பார்க்கும் போது ‘கங்குவா’ திரைப்படம் ரிலீசை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் தெரிய வருகிறது.

வித்தியாசமான பல கெட்டப்புகளில் சூர்யா நடித்திருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்பட 10 மொழிகளில் உருவாகி வருவதாகவும் சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் - இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

நான் இன்னும் லேடி சூப்பர் ஸ்டார் தான்.. முதல் பாலிவுட் படத்திற்கே விருது பெற்ற நயன்..!

நடிகை நயன்தாரா பாலிவுட் திரையுலகில் முதல் திரைப்படமாக ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படத்தில் நடித்த நிலையில் முதல் பாலிவுட் திரைப்படத்திற்கு அவருக்கு விருது கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தோளோடு சாய்ந்து ரொமான்ஸ்.. லிப் கிஸ் முத்தம்.. கர்ப்பிணி அமலாபால் க்யூட் வீடியோ..!

நடிகை அமலாபால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் தனது கணவருடன் ரொமான்ஸ் ஆக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்

விராத்-அனுஷ்காவுக்கு கிடைத்த விலை மதிப்பில்லா பொக்கிஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா தம்பதிக்கு விலை மதிப்பில்லா பொக்கிஷம் கிடைத்துள்ளததை அடுத்து ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நான் உங்களைக் கண்டிக்க விரும்பவில்லை.. த்ரிஷாவை சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் குறித்து விஷால்..

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜுவின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் விஷாலும் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து

தனுஷின் 'ராயன்' படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்லை.. சொன்னது யார் தெரியுமா?

தனுஷின் 50வது திரைப்படமான 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.