'ரெட்ரோ' படத்தின் ட்ரைலர், இசை வெளியீட்டு எங்கே? எப்போது? சூர்யாவின் அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூர்யாவின் ’ரெட்ரோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, வரும் மே மாதம் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடம், தேதி மற்றும் நேரம் குறித்த தகவல்களை சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிய ’ரெட்ரோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, விறுவிறுப்பாக ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ஏப்ரல் 18ஆம் தேதி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாலை 5 மணிக்கு இசை வெளியீட்டு விழா தொடங்கும் என்று சூர்யா தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விழாவுக்கு சில சிறப்பு விருந்தினர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் ரசிகர்கள் இந்த விழாவில் அதிக அளவில் கலந்து கொள்வார்கள் என்றும், இந்த விழா இந்த படத்தின் முக்கிய புரமோஷனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில் சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன..
Love, Laughter and War in shades never seen before ❤️🔥
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) April 16, 2025
Brace for the grand Audio and Trailer launch of #Retro on 18th April at Nehru Indoor Stadium, 5 PM onwards✨#RetroFromMay1 #LoveLaughterWar@Suriya_Offl #Jyotika @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @prakashraaj… pic.twitter.com/KGmr6di5qB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com