சூர்யாவின் 'ரெட்ரோ' சென்சார், ரன்னிங் டைம் தகவல்.. எத்தனை கட்?


Send us your feedback to audioarticles@vaarta.com


சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, வரும் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, தற்போது இந்த படத்தின் சென்சார் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் கசிந்து விட்டது.
‘ரெட்ரோ’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாகவும், படத்தின் ரன்னிங் டைம் 168 நிமிடங்கள் அதாவது, 2 மணி நேரம் மற்றும் 48 நிமிடங்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடும் இந்த படத்தின் ரன்னிங் டைம் சரியாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அது மட்டுமின்றி, இந்த படத்தில் இடம்பெற்றிருந்த சில ரத்த வெள்ள காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் 34 வினாடிகள் நீக்கப்பட்ட காட்சிகளாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து, சில வார்த்தைகள் மியுட் செய்யப்பட வேண்டும் என சென்சார் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளது சான்றிதழ்களில் இருந்து தெரிய வருகிறது.
சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில் சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com