ரூ.200 கோடியை தாண்டிய சூர்யாவின் 'ரெட்ரோ' வசூல்.. தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படம் ரூ.200 கோடியை தாண்டி விட்டதாக தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான ‘ரெட்ரோ’ திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தன.
இந்த படம் மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது. நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், ரசிகர்களுக்கு கொண்டாடும் வகையில் இருந்தது என்று கூறப்பட்டது.
இந்நிலையில், இப்படம் முதல் நாளிலேயே ரூ.50 கோடி வசூல் செய்ததாக செய்திகள் வந்த நிலையில், தற்போது ரூ.235 கோடி வசூல் செய்துள்ளதாக 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, சூர்யாவின் ரசிகர்கள் இந்த தகவலை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
Dear Audience and #AnbaanaFans, we're humbled by your immense love and support for #TheOne ‼️
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) May 18, 2025
Grateful for the glory, it's all because of you ❤#RETRO@Suriya_Offl #Jyotika @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @prakashraaj @C_I_N_E_M_A_A @rajsekarpandian… pic.twitter.com/wScjYwaqu4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com