சூர்யா படங்களில் 'ரெட்ரோ' தான் சாதனை.. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?


Send us your feedback to audioarticles@vaarta.com


இதுவரை வெளியான சூர்யா படங்களில் ‘ரெட்ரோ’ படம் தான் முதல் நாளில் மிக அதிக வசூல் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல், சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான ‘ரெட்ரோ’ திரைப்படம் நேற்று வெளியானது. முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன.
இதனை அடுத்து, இந்த படம் வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படம் முதல் நாளில் 17 கோடி ரூபாய் தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை வெளியான சூர்யா படங்களில், இந்த படம் தான் தமிழகத்தில் மிக அதிகமாக வசூல் செய்த சூர்யா படம் எனவும், டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.
இன்னும் சில மணி நேரத்தில், உலகம் முழுவதும் இந்த படம் எவ்வளவு வசூல் செய்திருக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
’கங்குவா’ உட்பட சில தொடர் தோல்விகளுக்கு பின்னர், ‘ரெட்ரோ’ படத்தின் மூலம் சூர்யா மீண்டும் கம்பேக் ஆகி உள்ளார், இது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments