close
Choose your channels

'ரெட்ரோ' படத்தின் 'கனிமா' பாடல் சிம்பு பாடலின் இன்ஸ்பிரேஷன்? 20 வருடங்களுக்கு முந்தைய ஹிட் பாடல்..!

Tuesday, April 22, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த 'ரெட்ரோ’ படத்தில் இடம் பெற்ற 'கனிமா' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி, உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில், இந்த பாடல் 20 வருடங்களுக்கு முன் வெளியான சிம்பு படத்தின் இன்ஸ்பிரேஷன் என்று இந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிம்பு - ஜோதிகா நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான 'மன்மதன்' என்ற படத்தில் இடம்பெற்ற 'என் ஆசை மைதிலியே' என்ற பாடல் அப்போதே சூப்பர் ஹிட் என்பது தெரிந்தது. இந்த பாடலை சிம்பு மற்றும் சுசித்ரா பாடியிருந்த நிலையில், இந்த பாடலை இன்ஸ்பிரேஷனாக கொண்டு தான் 'ரெட்ரோ’ படத்தில் 'கனிமா' என்ற பாடல் இடம்பெற்றதாக சமீபத்தில் பேட்டி அளித்த சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் மிகப்பெரிய அளவில் ஹிட்டான நிலையில், தற்போது இது சிம்புவின் ’மன்மதன்’ படத்தின் இன்ஸ்பிரேஷன் என்ற தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த பாடல் திரையரங்குகளில் ஒலிக்கும் போது, ரசிகர்கள் எழுந்து ஆட்டம் போடும் வகையில் உணர்வுபூர்வமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன. சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் அனைத்து பாடல்களும் வெளியான நிலையில், அத்தனை பாடல்களும் ஹிட்டாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில் சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment