அகல் விளக்கும் அற்புதமும்.. 'ரெட்ரோ' படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான விஷயம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூர்யா நடித்த "ரெட்ரோ" என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த படம் மே மாதம் 1-ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான டீசர் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இப்படத்தின் புரமோஷன்களில் வித்தியாசமாக கார்ட்டூன் வடிவில் சில புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில், தற்போது மேலும் சில கார்ட்டூன் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதோடு, இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் ஒன்றான ஸ்டோன் பெஞ்ச் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘’ரெட்ரோ’ படப்பிடிப்பு வாரணாசியில் நடந்து கொண்டிருந்த போது, முதலில் முக்கியமான காட்சிகளை படமாக்கினோம். அதன் பிறகு, சூர்யாவின் காட்சிகளை படமாக்க வேண்டிய நேரம் வந்தது.
சூர்யா படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தன்னுடைய வசனங்களை கேட்டறிந்து கொண்டார். ஆனால் பகல் நேர படப்பிடிப்பு என்பதால், ஒளிப்பதிவாளர் கூடுதல் விளக்குகளை கொண்டு வரவில்லை. நேரமும் அதிகமாகிக் கொண்டே இருந்ததால், அவர் திடீரென புத்திசாலித்தனத்துடன் 100 முதல் 200 அகல் விளக்குகளை பயன்படுத்தி தற்காலிகமாக ஒரு ஒளி அமைப்பை உருவாக்கினார்.
சூர்யாவும் நிலைமையை புரிந்து கொண்டு கதாபாத்திரத்திற்குள் சென்று, ஒரே ஷாட்டில் அந்த காட்சியை நடித்து முடித்தார். அவருடன் நடித்த பூஜா, உணர்ச்சி பொங்க நடித்ததால், அந்த காட்சிக்கு மேலும் ஆழம் ஏற்பட்டது.
நாங்கள் இந்த காட்சியை படமாக்க நீண்ட நேரமாகும் என்று நினைத்த நிலையில், வெகு எளிதாக எங்கள் வேலை முடிந்து விட்டது. இரவு தொடங்குவதற்குள் எங்கள் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன" என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
➡️ #RetroBTSComic x #RetroFromMay1 🔥
— Stone Bench (@stonebenchers) February 17, 2025
EPI 002 - AGAL VILLAKKUM ARPUTHAMUM 🪔🤩
From the vault of RETRO BTS ⬇️
The initial plan was simple – after reaching Varanasi, shoot two scenes, including one with the lead actors during twilight, and wrap up the day. Everything seemed… pic.twitter.com/VpafASuuz3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com