சூர்யாவின் 'ரெட்ரோ' படத்தில் 'பாகுபலி 2' ஸ்டண்ட் மாஸ்டர்.. வேற லெவல் ஆக்சன் காட்சிகள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே ஒன்றாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி, ரசிகர்களையும், சினிமா ஆர்வலர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
அந்த வகையில், தற்போது இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் குறித்த தகவல் உண்மையாக ஆச்சரியத்தக்கதாக உள்ளது. இந்த படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டராக கேச்சா என்பவர் பணிபுரிந்துள்ளார். இவர் ’Onga Bak 2’ "பாகுபலி 2" உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தைச் சேர்ந்த இவர், ஸ்டண்ட் காட்சிகளை அமைப்பதில் உலக அளவில் பிரபலமானவர். ஸ்டண்ட் மாஸ்டர் கேச்சாவுடன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் பலமுறை வீடியோ காலில் தொடர்பு கொண்டு, படத்திற்கு தேவையான சண்டைக்காட்சிகள் குறித்து விவாதித்துள்ளார். ஒவ்வொரு ஸ்டண்ட் காட்சியும் மற்ற காட்சியுடன் ஒத்திருக்கக் கூடாது என இயக்குனர் கூறியதை ஒரு சவாலாக ஏற்று, காட்சியின் பின்னணி மற்றும் உணர்வுகளை ஆழமாக புரிந்து கொண்டு, புதுமையான ஸ்டண்ட் காட்சிகளை வழங்கியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜின் கலை உணர்வுக்கு ஏற்ப இந்த ஸ்டண்ட் காட்சிகள் என்றென்றும் நிலைத்து நிற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மொழி ஒரு தடையாக இல்லாமல், சினிமாவை நேசிக்கும் கேச்சாவின் ஆர்வம் காரணமாக, இந்த படத்தின் சண்டைக்காட்சிகள் மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை திரையில் காணும் போது, ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது "ரெட்ரோ" படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
➡️ #RetroBTSComic x #RetroFromMay1 🔥
— Stone Bench (@stonebenchers) March 17, 2025
EPI 006 - Kech Poata Sketch 👊🏻 💥
After Love and Laughter, it was time to wage a WAR now. Who will be the stunt master to make Retro even more special ? Kecha was destined to be the grandmaster to call the shots for THE ONE. Having worked… pic.twitter.com/6ZATOdM1rE
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments