வேற லெவலில் சூர்யாவின் 'ரெட்ரோ' புரமோஷன்.. தாம்பரம் ரயிலில் செம சம்பவம்.. வீடியோ வைரல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம், மே மாதம் 1ஆம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகளும் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அடுத்த கட்டமாக, தாம்பரத்தில் உள்ள மின்சார ரயிலில் இந்தப் படத்தின் போஸ்டர்கள் முழுமையாக ஒட்டப்பட்டு, வேறு லெவலில் புரமோஷன் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இந்த போஸ்டர்களை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்த புரமோஷன் முறையானது வேறு லெவலில் இருப்பதாக ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கான வீடியோவை 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில் சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன்பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன..
All aboard for the #Retro ride 🚆🔥
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) April 15, 2025
Spot #TheOne on the rails and tag us ⚔#LoveLaughterWar #RetroFromMay1@Suriya_Offl #Jyotika @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @prakashraaj @C_I_N_E_M_A_A @rajsekarpandian @kaarthekeyens @kshreyaas @cheps911 @jacki_art #MayaPandi… pic.twitter.com/FYj4JPmtVJ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com