close
Choose your channels

'சூரரைப் போற்று' படத்திற்கு கிடைத்த மற்றொரு சர்வதேச அங்கீகாரம்!

Thursday, May 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய ’சூரரைப்போற்று’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ஓடிடியில் வெளியாகி அதிக பார்வையாளர்கள் பெற்ற படங்களில் இதுவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே இந்த படம் ஆஸ்கார் விருது வரை சென்று வந்தது என்பதும் அது மட்டுமின்றி பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பெருமை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி 2021ஆம் ஆண்டு ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு கொள்ளும் வாய்ப்பை ’சூரரைப் போற்று’ திரைப்படம் பெற்றுள்ளது. ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா வரும் ஜூன் 11 முதல் 20 வரை நடைபெற உள்ள நிலையில் இந்த விழாவில் கலந்துகொள்ளும் திரைப்படங்களில் ஒன்றாக ’சூரரைப் போற்று’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் டெக்கான் உரிமையாளர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, கிருஷ்ணா குமார், ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் என்பதும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷின் இசை மிகப்பெரிய பலமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.