சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,September 18 2017]

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வரும் 25ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும், இந்த படப்பிடிப்புடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் வெளிவந்த செய்தியை சமீபத்தில் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி உள்பட சில முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளனர். இதன்படி இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் வரும் அக்டோபர் மாதத்திலும் நவம்பரில் டீசரும், டிசம்பரில் இசை வெளியீடு மற்றும் டிரைலரும் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்பதை குறிக்கும் வகையில் நேற்று வெளியான புதிய போஸ்டரில் 'பொங்கல்க்கு சேர்றோம்' என்று குறிப்பிட்டுள்து.. 2018 ஜனவரி மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் ரஜினியின் 2.0' வெளிவரவுள்ள நிலையில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' அதற்கு ஒருசில நாட்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பாட்டுப்பாடி, ஆட்டம் போடும் கமல் நாட்டை ஆள முடியுமா?  சுப்பிரமணியன் சுவாமி 

சுப்பிரமணியம் சுவாமி ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்து கண்டங்களை பெற்றுள்ள நிலையில்

கொரிய பேட்மின்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து 

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சற்றுமுன் நடந்த கொரியன் பேட்மிண்டன் தொடர் போட்டியின் சாம்பியன் பட்டம் வென்றார்

துப்பறிவாளனால் புத்துயிர் பெற்றதா ஆயிரத்தில் இருவர் ?

விஷால் நடித்த 'துப்பறிவாளன்' திரைப்படத்தில் வில்லனாக நடித்த வினய் நடித்து நீண்ட நாள் கிடப்பில் இருந்த 'ஆயிரத்தில் இருவர்' திரைப்படம் புத்துயிர் பெற்றுள்ளது

இந்தியா-பாகிஸ்தான் போர் நாயகன் அர்ஜன்சிங் காலமானார்

இந்திய விமானப்படையின் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவரும்,  இந்திய விமானப்படையில் 5 நட்சத்திரம் பெற்ற ஒரே விமானப்படை தளபதியுமான அர்ஜன் சிங் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 98

தமிழ்ராக்கர்ஸ்-தமிழ்கன் அட்மின் படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர் சங்கம்

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் பொறுப்பேற்றதில் இருந்தே ஆன்லைன் பைரஸியை ஒழிக்க அவர் எடுத்து வரும் ஆக்கபூர்வமான நடவடிக்கை அனைவரும் அறிந்ததே.