சூர்யாவின் 'காப்பான்' ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,August 04 2019]

சூர்யா நடிப்பில் இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'காப்பான்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் இம்மாதம் 30ஆம் தேதி இந்த படம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது 

இந்த நிலையில் பிரபாஸ் நடித்த 'சாஹோ' திரைப்படம் அதே தேதியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பதால், தற்போது 'காப்பான்' படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சற்று முன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்த லைக்கா நிறுவனம் இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை அடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

சுபாஷ் என்ற கமாண்டோ அதிகாரி கேரக்டரில் சூர்யாவும், அவருகு ஜோடியாக காவ்யா என்ற கேரக்டரில் சாயிஷாவும் நடித்துள்ள இந்த படத்தில் இந்திய பிரதமர் கேரக்டரில் மோகன்லால் நடித்துள்ளார். மேலும் பொமன் இரானி, சமுத்திரக்கனி, ஆர்யா, பூர்ணா, தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.