சூர்யா, கார்த்தி, அதிதிஷங்கரின் 'விருமன்': பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்! 

  • IndiaGlitz, [Monday,September 06 2021]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படத்தில் நாயகியாக அறிமுகமாக உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம். இதுகுறித்த ட்வீட்களை சூர்யா, ஷங்கர், அதிதி ஷங்கர், கார்த்தி உள்ளிட்டோர் பதிவு செய்துள்ளனர் என்பதும் இந்த ட்வீட்டுகள் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் சூர்யா, கார்த்தி, சிவகுமார், ஷங்கர், அதிதி ஷங்கர், இயக்குனர் முத்தையா, ராஜசேகர பாண்டியன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த பூஜையில் பிரபல இயக்குனர் பாலா உள்பட பலர் கலந்து கொண்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

’விருமன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை முத்தையா இயக்க உள்ளார் என்பதும் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் அதிதி ஷங்கர் அறிமுகமாகும் இந்தப் படம் பூஜை அன்றே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.