வைரலாகும் சூர்யாவின் லேட்டஸ்ட் லுக்!

  • IndiaGlitz, [Monday,January 04 2021]

சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தற்போது அவர் ’நவரசா’ என்ற அந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கவிருக்கும் படத்தில் அவர் நடிக்க இருக்கிறார் என்பதும் தெரிந்ததே.

சூர்யா, பாண்டிராஜ் இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூர்யாவின் லேட்டஸ்ட் லுக் ஒன்று சமீபத்தில் வைரலாகி வருகிறது ஜிம் ஒன்றில் சூர்யா ஸ்டைலாக இருக்கும் இந்த கெட்டப், பாண்டிராஜ் இயக்கவிருக்கும் படத்திற்கான கெட்டப்பா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பாண்டிராஜ் படத்தை முடித்துவிட்டு, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கி அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

குரூப்-1 தேர்வில் அறிமுக இயக்குனரின் வெற்றிப்படம் குறித்த கேள்வி: ஆச்சரியத்தில் திரையுலகினர்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. கதிர், ஆனந்தி நடிப்பில் பா.ரஞ்சித் தயாரித்த இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது

பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த தாய்! அதிர்ச்சி காரணம்

திருமணம் செய்து வைக்குமாறு அடம்பிடித்த மகனை பெற்ற தாயே தனது உறவினர்கள் மற்றும் கூலிப்படையின் உதவியால் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஹீரோவாகிவிட்டார் பிக் பாஸ் ரன்னர்: டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் இறுதிப் போட்டி வரை வந்தவர் நடன இயக்குனர் சாண்டி என்பது அனைவரும் அறிந்ததே.

தனுஷின் அடுத்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதும் பிரபலம்!

தனுஷ் நடிக்கவிருக்கும் 43வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவிருக்கிறார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இறங்கி வேலை செய்த ஆரி ரசிகர்கள்: நூலிழையில் தப்பித்த ரம்யா!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஆஜித், ஷிவானி, சோம், கேபி மற்றும் ரம்யா ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இருந்த நிலையில் நேற்று கமல்ஹாசனால் கேபி காப்பாற்றப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.