பார்வதி அம்மாளை நேரில் சந்தித்து சூர்யா கொடுத்த உதவித்தொகை: எவ்வளவு தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,November 17 2021]

சூர்யா நடித்து தயாரித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் அமேசானில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் பாராட்டினார் என்பது தெரிந்ததே.

ஒரு சிலர் இந்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்து வந்தாலும் ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்கள் இந்த படத்துக்கு பெரும் ஆதரவை கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் ராசா கண்ணு மற்றும் பார்வதி அம்மாள் ஆகியோரின் உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டதை அடுத்து பார்வதி அம்மாள் குடும்பத்திற்கு ஏற்கனவே ரூபாய் 10 லட்சம் வழங்குவதாக நடிகர் சூர்யா அறிவித்து இருந்தார்.

அந்த வகையில் தனது சார்பாக ரூபாய் 10 லட்சம் மற்றும் 2டி நிறுவனத்தின் சார்பாக ரூபாய் 5 லட்சம் என மொத்தம் 15 லட்ச ரூபாய் பார்வதி அம்மாளை நேரில் சந்தித்து நடிகர் சூர்யா வழங்கி உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழ் திரையுலகின் நடிகர்-இயக்குனர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர் ,வசனகர்த்தா என்.ஆர். மனோகர் அவர்கள் இன்று காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

விமர்சனம் செய்யுங்கள், ஆனால் கொலை மிரட்டல் எல்லாம் கண்டிக்கத்தக்கது: 'ஜெய்பீம்' குறித்து பிரபல இயக்குனர்!

நடிகர் சூர்யா நடித்து தயாரித்த 'ஜெய்பீம்' என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இன்னொரு பக்கம் இந்த படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது

சாலை விபத்து… நடிகர் சுஷாந்த் சிங் குடும்பத்தில் மீண்டும் சோகம்!

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் பீஹார் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது

பாவனியை சமாளிக்க முடியாமல் திணறுகிறாரா ராஜூ?

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 45வது நாளை எட்டியுள்ள நிலையில் இந்த 45 நாட்களில் போட்டியாளர்களுக்கு இடையே பல சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரோஜாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நீண்டநாள் தோழி நடிகை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை ரோஜா.