2 முறை திருமணம் செய்த தொழிலதிபருக்கு 3வது மனைவியாகிய சூர்யா பட நடிகை!

  • IndiaGlitz, [Thursday,June 16 2022]

2 முறை திருமணம் செய்த தொழிலதிபரை சூர்யா படத்தில் நடித்த நடிகை ஒருவர் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்த திரைப்படம் ’மௌனம் பேசியதே’. கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகை நேஹா பெண்ட்சே. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி உள்பட பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை நேஹா பெண்ட்சே தொழிலதிபர் ஷர்துல் பயாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொழிலதிபர் ஷர்துல் பயாஸ் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து 2 குழந்தைகளுடன் இருப்பவர் என்பதும் நேஹாவுக்கு இது முதல் திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பிய நிலையில் இதற்கு பல நாட்களாக பதில் சொல்லாமல் இருந்த நேஹா, தற்போது பதில் கூறியுள்ளார். ‘ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிதாக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் மூன்றாம் தாரமாக உலகத்தில் நான் மட்டுமே திருமணம் செய்துகொண்டதாக பலர் பேசுகிறார்கள் என்றும் அது அவரவர்களின் விருப்பம் என்றும் தற்போதைய காலகட்டத்தில் இது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது’ என்றும் தெரிவித்துள்ளார்.

More News

14வது திருமண நாளை கொண்டாடும் அஜித் பட நாயகி: ரசிகர்கள் வாழ்த்து!

அஜித் நடித்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை இன்று தனது 14வது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

'டான்' படத்தை பாராட்டிய பிரபல அரசியல் கட்சி தலைவர்: படகுழுவினர் உற்சாகம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பதும் தெரிந்ததே.

12 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில்: ஐஸ்வர்யா ரஜினியின் வைரல் வீடியோ

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பணிபுரியும் வீடியோ வைரலாகி வருகிறது. 

'அம்மா' என்று சொல்லி கொடுத்தால் 'அப்பா' என்று சொல்லும் சிரஞ்சீவி சார்ஜா மகன்: வைரல் வீடியோ

மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மகன் தற்போது வளர்ந்து வரும் நிலையில் அவருக்கு அவருடைய அம்மா மேக்னாராஜ் 'அம்மா' என்று சொல்லிக் கொடுத்த நிலையில் அவரது மகன் 'அப்பா'

இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை: அதிர்ச்சி தகவல் தந்த சூரி!

நடிகர் சூரி தற்போது பிரபல நடிகர்களின் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருவது மட்டுமின்றி வெற்றிமாறன் இயக்கிவரும் 'விடுதலை' என்ற படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார்