சுவர் ஏறி குதித்து சாகசம் செய்த சூர்யா பட நடிகையின் சகோதரி.. வீடியோ வைரல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூர்யா படத்தில் நாயகியாக நடித்த நடிகையின் சகோதரி செய்த வீர சாகசம் குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சூர்யா நடித்த ’கங்குவா’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி .இவருடைய சகோதரி குஷ்பு பதானி ராணுவத்தில் வேலை பார்த்தவர் என்பதும், சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவர் ஆக்டிவாக இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை நடை பயிற்சிக்கு குஷ்பு பதானி சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பாழடைந்த கட்டடத்தில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதை கேட்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த கட்டிடத்தின் உள்ளே நுழைய முடியாத நிலையில், உடனே அவர் சுவர் ஏறி குதித்து உள்ளே பார்த்தபோது, பத்து மாத பெண் குழந்தை ஒன்று படுகாயம் அடைந்து அழுது கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர் அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் விரைந்து வந்து அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்த குழந்தையை தனியாக விட்டு விட்டு சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், Instagram பக்கத்தில் குழந்தையை காப்பாற்றியது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ள குஷ்பு பதானி அதில் கூறியபோது, ‘அந்த சிறுமியை அதிகாரிகள் நல்ல முறையில் கவனித்து, உரிய விதிமுறைகளோடும் கட்டுப்பாடுகளோடும் கவனிக்க வேண்டும் என கோரிக்கை விடுகிறேன்.
நம் நாட்டில் பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள்! எப்போது வரை இது போல நடக்க போகிறது? தயவுசெய்து அந்த சிறுமி நல்லவர்களின் கையில் சென்று, இனிமேல் வாழ்க்கை வளமாக இருக்க என்னால் முடிந்ததை செய்வேன்’ என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com