close
Choose your channels

இயக்குனர் ஹரியின் நீண்டநாள் கனவு.. நடிகர் சூர்யா கலந்து கொண்டு சிறப்பித்த புகைப்படங்கள்..!

Sunday, April 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஹரியின் நீண்ட நாள் கனவு இன்று நனவாகியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இயக்குனர் ஹரியின் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று ஸ்டுடியோ தொடங்க வேண்டும் என்பது. இந்த நிலையில் குட் லக் ஸ்டுடியோ என்ற ஹரியின் ஸ்டூடியோ இன்று திறக்கப்பட்ட நிலையில் இந்த ஸ்டுடியோ திறப்பு விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் மனோ தங்கராஜ், நடிகர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரி மற்றும் அவரது மனைவி ப்ரீத்தி ஹரியின் குட்லக் ஸ்டூடியோ திறப்பு விழா நிகழ்ச்சியில் பல திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘அருவா’ என்ற திரைப்படம் உருவாக இருந்த நிலையில் அந்த படம் எதிர்பாராத வகையில் டிராப்பானது. இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அந்த கருத்து வேறுபாடுகளை மறந்து சூர்யா, ஹரியின் ஸ்டுடியோ திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்ததை திரையுலகினர் பாசிட்டிவாக பார்த்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.