'வாடிவாசல்' படத்தில் இருந்து விலகிவிட்டாரா சூர்யா? அப்ப இவர் தான் நாயகனா?

  • IndiaGlitz, [Saturday,February 10 2024]

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ என்ற படத்தின் அறிவிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளியான போதிலும் இந்த படத்தின் டெஸ்ட் படப்பிடிப்பு மட்டுமே நடந்த நிலையில் படப்பிடிப்பு நடைபெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

இயக்குனர் வெற்றி மாறன் ’விடுதலை 2’ படத்தை முடித்துவிட்டு ’வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென இந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக தனுஷ் இணைவார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ’வாடிவாசல்’ படத்தில் அமீர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அமீருடன் சூர்யா நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அமீருடன் நடிப்பதில் சூர்யாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அவரது தரப்பில் கூறப்பட்ட நிலையில் தற்போது வெற்றிமாறன் ’விடுதலை 2’ படத்தை முடித்துவிட்டு விஜய்யின் ‘தளபதி 69’ படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதால் சூர்யா திடீரென இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.

இயக்குனர் வெற்றிமாறனுக்கு விஜய் படத்தின் வாய்ப்பு கிடைத்தால் அந்த படத்தை முடித்துவிட்டு அதன் பிறகு தனுஷை வைத்து ’வாடிவாசல்’ படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.

 

More News

'புதுப்பேட்டை 2' படத்தில் நடிப்பாரா சோனியா அகர்வால்? அவரே கூறிய பதில்..!

செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவான 'புதுப்பேட்டை' என்ற திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பணிகள் தற்போது நடைபெற்று

ஏஆர். ரஹ்மான் நிகழ்ச்சி போலவே ஒரு சொதப்பல்.. பாதியில் நிறுத்தப்பட்ட ஹரிஹரன் இசை நிகழ்ச்சி..!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடந்த போது அதில் கூடுதலாக டிக்கெட் வழங்கியதன் காரணமாக டிக்கெட் வாங்கியவர்கள் இசை நிகழ்ச்சிக்கு

விஜய்யை அடுத்து அரசியலுக்கு வரும் விஷால்.. ரஜினியின் ரியாக்சன்..!

சமீபத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தார் என்பதும் அவரது அரசியல் வருகை குறித்த கேள்விக்கு ரஜினிகாந்த் 'வாழ்த்துக்கள்' என்று கூறியதையும் பார்த்தோம். இந்த நிலையில் விஜய்யை அடுத்து

எதிர்காலத்தை மாத்துற சக்தி உன் ஒருத்திக்கு மட்டும் தான் இருக்கு: 'மேடம் வெப்' புரமோ வீடியோ

ஹாலிவுட்டில் தயாரான 'மேடம் வெப்' என்ற திரைப்படம் சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட ஒரு த்ரில்  படமாகும். பிப்ரவரி 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் இந்த படம் தமிழிலும் தமிழகத்தில் வெளியாக

'காக்கா - கழுகு' விவகாரத்தை அப்படியே விட்ருக்கலாம், ரஜினி தப்பு செய்திட்டார்: பிரபல இசையமைப்பாளர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த 'லால் சலாம்' இசை வெளியீட்டு விழாவில் தான் பேசிய காக்கா கழுகு கதையில் காக்கா என்பதை விஜய்யை வைத்து நான் சொன்னதாக அனைவரு