close
Choose your channels

எல்லா ஜாதியிலயும் பெரிய பெரிய திருடங்க இருக்காங்க: சூர்யாவின் 'ஜெய்பீம்' டீசர்

Friday, October 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஜெய்பீம்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் 2-ம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி உள்ளது.

பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தினர் காவல்துறையினரால் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக வழக்கறிஞராக சூர்யா களமிறங்கி நீதிமன்றம் வரை சென்று அவர்களுக்கு நீதி தேடி தருவது தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் அவர்கள் இயக்கியுள்ளார், சூர்யா, பிரகாஷ்ராஜ்ம் ரஜிஷா விஜயன், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

’பாதிக்கப்பட்டவங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி, அவங்களுக்கு நடந்த பாதிப்பைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்’, ‘திருடங்கள் இல்லாத ஜாதி இருக்கா? உங்க ஜாதியிலயும், என ஜாதியிலயும் எல்லா ஜாதியிலயும் பெரிய பெரிய திருடங்க இருக்காங்க’ போன்ற வசனங்களில் இருந்தே இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.