எல்லா ஜாதியிலயும் பெரிய பெரிய திருடங்க இருக்காங்க: சூர்யாவின் 'ஜெய்பீம்' டீசர்

  • IndiaGlitz, [Friday,October 15 2021]

சூர்யா நடிப்பில், 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஜெய்பீம்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் 2-ம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி உள்ளது.

பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தினர் காவல்துறையினரால் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக வழக்கறிஞராக சூர்யா களமிறங்கி நீதிமன்றம் வரை சென்று அவர்களுக்கு நீதி தேடி தருவது தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் அவர்கள் இயக்கியுள்ளார், சூர்யா, பிரகாஷ்ராஜ்ம் ரஜிஷா விஜயன், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

’பாதிக்கப்பட்டவங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி, அவங்களுக்கு நடந்த பாதிப்பைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்’, ‘திருடங்கள் இல்லாத ஜாதி இருக்கா? உங்க ஜாதியிலயும், என ஜாதியிலயும் எல்லா ஜாதியிலயும் பெரிய பெரிய திருடங்க இருக்காங்க’ போன்ற வசனங்களில் இருந்தே இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

KKR vs CSK யாருக்கு அதிக பலம்? 2021 சாம்பியன் பட்டம் யாருக்கு?

14 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாயில் நடைபெற உள்ளது.

நடிகர் ஷாருக்கான் மகனுக்கு இதுவரை கிடைக்காத ஜாமீன்… பகீர் பின்னணி!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன்

டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை!

தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை ஒருவர் டாப்லெஸ் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

பிரியங்கா டார்கெட் செய்யும் போட்டியாளர்: அப்படி என்ன தான் பகையோ?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரோமோ வீடியோவில் பிரியங்கா அக்ஷராவை டார்கெக் செய்வது போன்ற காட்சி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'வஞ்சகர் உலகம்' இயக்குனரின் அடுத்த படத்தில் சந்தானம்: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்!  

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'வஞ்சகர் உலகம்' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மனோஜ் பிதா இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு