சூர்யா ரிலீஸ் செய்த டிரைலர்: 28ஆம் தேதி ஓடிடியில் வெளியீடு

  • IndiaGlitz, [Sunday,August 16 2020]

தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும் இந்த வருடம் முழுவதுமே திரையரங்குகள் திறக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுவதால் தமிழ் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திரைக்கு வர தயாராக இருக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றாக ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது. அந்த வகையில் வரும் 28ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த திரைப்படம் ஒன்றின் டிரெய்லரை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் சற்று முன் வெளியிட்டு உள்ளார்.

நடிகை ஸ்ரேயா ரெட்டி முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் ’அண்டாவ காணோம்’. இந்த திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப் போடப்பட்டு கொண்டே இருந்தது.

இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி ஓடிடியில் இந்த படம் ரிலீசாக உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் டிரெய்லரை வெளியிட்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். டிரைலர் வெளியிட்ட சூர்யாவுக்கு இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் மற்றும் நாயகி ஸ்ரேயா ரெட்டி நன்றி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்: அதிர்ச்சி தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

லோகேஷ் கனகராஜ் ஹீரோவின் மறைமுக திருமண அறிவிப்பா இது? பரபரப்பு தகவல்

தமிழ் திரைப்பட ஹீரோ ஒருவர் தனது திருமணம் குறித்த மறைமுக அறிவிப்பை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

எஸ்பிபி சார் கடவுள் மாதிரி: கண்கலங்கிய பிரபல நடிகையின் வீடியோ

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்யாத

தொரகா ரண்டி அன்னைய்யா: எஸ்பிபி குறித்த கமல்ஹாசனின் பதிவு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

சென்னையுடன் உங்கள் அன்பு தொடர்வதில் மகிழ்ச்சி: தோனி குறித்து கமல் டுவீட்

தல தோனி அவர்கள் நேற்று மாலை சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததில் இருந்து சமூக வலைத்தளங்கள் ஸ்தம்பித்து வருகிறது என்பதும், முன்னாள், இந்நாள் கிரிக்கெட் பிரபலங்கள்