close
Choose your channels

ஜீவா படத்தை புரமோஷன் செய்யும் சூர்யா

Friday, February 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகிய ‘ஜிப்ஸி’திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாரானது. இருப்பினும் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டிருந்த நிலையில் இயக்குனர் ராஜுமுருகன் டிரிபியூனல் சென்று ஒருவழியாக சென்சார் சான்றிதழ் பெற்றுவிட்டார்

இந்த நிலையில் சென்சாரில் ‘ஏ’சான்றிதழ் பெற்ற இந்த படம் வரும் மார்ச் 6 முதல் வெளியாகும் என அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தற்போது புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் இந்த டிரைலரை நடிகர் சூர்யா வெளியிடவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா இந்த படத்தை புரமோஷன் செய்வதால் இந்த படம் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவா, நடாஷா சிங், சன்னி வாய்னே, லால் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சந்தோஷ் நாராயணன் இசையில் செல்வகுமார் ஒளிப்பதிவில், ரெய்மண்ட் டெர்ரிக் படத்தொகுப்பில்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.