'ரெட்ரோ' படத்தின் 55 வினாடி வீடியோவை வெளியிட்ட சூர்யா.. இன்று என்ன ஸ்பெஷல் நாள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் மே 1 ஆம் தேதி, தொழிலாளர் தினத்தில், உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
ஏற்கனவே, இந்த படத்தின் டீசர் வெளியானதும், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், படத்தின் டிரைலர், பாடல்கள் ரிலீஸ் விழா உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும், புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இன்று, ‘ரெட்ரோ’ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் பிறந்த நாளை முன்னிட்டு, சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் 55 வினாடிகள் கொண்ட ஒரு சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், ‘ரெட்ரோ’ படத்திற்கான முக்கியக் காட்சிகள், சூர்யாவின் ஆக்சன் காட்சிகள், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்தை இயக்கிய விதம் மற்றும் அவர் சூர்யாவுக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் தருணங்கள் இடம்பெற்றுள்ளன. வீடியோவின் இறுதியில், கார்த்திக் சுப்புராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து முடிக்கப்பட்டுள்ளது.
சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
Wishing the path breaking and contemporary @karthiksubbaraj sir a wonderful birthday and all Love and Laughter ♥️
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) March 19, 2025
Wishes from team #Retro#HBDKarthikSubbaraj#RetroFromMay1 #LoveLaughterWar@Suriya_Offl #Jyotika @hegdepooja @Music_Santhosh @prakashraaj @C_I_N_E_M_A_A… pic.twitter.com/bpaymxGmSH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com