பெற்றோருக்கு சூர்யா விடுத்த முக்கிய வேண்டுகோள்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Saturday,April 23 2022]

அனைத்து பெற்றோர்களுக்கும் நடிகர் சூர்யா விடுத்த வேண்டுகோள் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சூர்யா கூறியிருப்பதாவது:

ஒரு சிறந்த பள்ளி தான் சிறந்த மனிதர்களை உருவாக்க முடியும். பள்ளிக்கூடம் என்பது பெரும் கட்டிடம் மட்டுமல்ல, அந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியது. தமிழ்நாடு அரசு பள்ளி மேலாண்மை குழு என்ற ஒரு குழுவை அமைத்துள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தில் அக்கறை உள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பல தரப்பினரும் இந்த குழுவில் இருக்கப்போகிறார்கள் .

பள்ளியை சுற்றி உள்ள அனைத்து குழந்தைகளையும் படிக்க வைப்பது, படிப்பை பாதியில் நிறுத்தி மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பது இந்த குழுவின் முக்கியமான வேலை. அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளி குழந்தைகள், சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கான சூழலையும் இந்த குழு கவனிக்கும். பள்ளியின் கட்டிட வசதி, மதிய உணவு திட்டம், மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் சரியான முறையில் வந்து சேர்ந்ததா என்பதையும் இந்த குழு கவனிப்பார்கள்.

நம்ம குழந்தைகளுக்கு நல்ல கல்வி சூழலும், வசதியும் கிடைக்க வேண்டுமென்றால் எல்லா அரசு பள்ளிகளில் நடக்கும் கல்வி மேலாண்மை குழுவில் பெற்றோர்கள் கலந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். சிறந்த பள்ளியும், சிறந்த கல்வியும் மாணவர்களின் உரிமை. அதற்கு துணை நிற்பதும் உறுதி செய்வதும் நமது கடமை’. இவ்வாறு சூர்யா அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

More News

சிம்பு பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட உதயநிதி!

நடிகர் சிம்பு பாடிய பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எம்எல்ஏ உதயநிதி கலந்துகொண்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

உன்னை கல்யாணம் பண்ணிட்டான், என்னை பண்ணிட்டான்: 'காத்துவாக்குல ரெண்டு காதல்' டிரைலர்

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' இந்த படம் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும்

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு: யாரை சொல்கிறார் சமந்தா?

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்ற அர்த்தத்தில் சமந்தா ஒரு டுவிட்டை பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிம்பு பாடிய மாஸ் பாடல் ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்

லிங்குசாமி இயக்கத்தில் ராம் போதினேனி நடிப்பில் உருவாகி வரும் தி வாரியர் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

'தளபதி 67' படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் இவர்களா? மீண்டும் இணையும் வெற்றிப்பட குழுவினர்?

தளபதி விஜய் நடித்து வரும் 66ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க