5 ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும்.. அண்ணா பல்கலையில் சூர்யா பேச்சு..!

  • IndiaGlitz, [Monday,March 18 2024]

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ‘5 ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும்’ என்று நடிகர் சூர்யா பேசியுள்ளார்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய (STEM) உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் பெண்கள் அதிகளவில் பங்குபெற வைக்க வேண்டும் என்பதை கருப்பொருளாகக் கொண்டு, அகரம் அறக்கட்டளை உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் சார்பாக ‘EMPOW HER - 2024’ என்ற கருத்தரங்கு இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு பேசிய போது ’பெண்களிடம் மிகப்பெரிய சக்தி உள்ளது, ஐந்து ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும் என்று தெரிவித்தார். நீல் ஆம்ஸ்ட்ராங் முதலில் நிலவில் கால் வைத்தாலும் அவரை அங்கு கொண்டு சேர்த்தது ஒரு பெண்தான், பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தது பெண் தான் என்று அவர் தெரிவித்தார்

அக்னி மிஸைல் முதல் இஸ்ரோ வரை பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது என்றும் என்னை சுற்றி இருக்கக்கூடிய பெண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார்

பெண்களால் முடியாதது எதுவுமில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு ஆண்களை விட 50 சதவீதம் அதிகமாக உழைக்க வேண்டிய நிலை உள்ளது என்றும் தெரிவித்தார். பெண்களை இன்னும் மேலே கொண்டு வர நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம் என்றும் அவர் கூறினார்.

More News

கலவி என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது என்பதை தனது ஆழ்ந்த கருத்தின் மூலம் விளக்கிய எழுத்தாளர் லதா .

நம்ம சமுதாயத்தில் பொதுவாகவே திருமணத்திற்கு முன்பு எந்த ஒரு பெண்ணோ ஆணோ உடலுறவு வைத்துக் கொள்வதில்லை.............

ஒருவழியாக வந்தது 'கங்குவா' படத்தின் டீசர் அப்டேட்.. உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்..!

சூர்யா நடித்து வரும் 'கங்குவா' படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த டீசர் குறித்த அப்டேட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில்

விஜய் வருகையால் ஸ்தம்பித்த கேரளா.. கட்டுக்கடங்காத கூட்டத்தால் திருவனந்தபுரத்தில் பரபரப்பு..!

கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதை அடுத்து இன்று விஜய் திருவனந்தபுரம் சென்றதாகவும் அவரை வரவேற்கவும் பார்க்கவும் ஏராளமான ரசிகர்கள் திருவனந்தபுரம்

விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் ஒரு மணி நேரம் சாலையில் கிடந்த தமிழ் சினிமா நடிகை.. அதிர்ச்சி தகவல்..!

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை ஒருவர் சாலை விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் யாராலும் கவனிக்கப்படாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை

டப்பிங் யூனியன் சங்க தேர்தல் முடிவுகள்.. ராதாரவிக்கு டஃப் கொடுத்தார்களா போட்டியாளர்கள்?

டப்பிங் யூனியன் சங்கத்தின் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் ராதாரவி வெற்றி பெற்று மீண்டும் தலைவர் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.