close
Choose your channels

நடிகர் சூர்யாவின் “ஜெய் பீம்“ திரைப்படம் செய்த புதிய சாதனை!

Thursday, December 9, 2021 • தமிழ் Comments

இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஜெய் பீம்“ திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் முன்னதாக கோல்டன் குளோப் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து இந்தப் படம் மேலும் ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறது.

அந்த வகையில் இந்திய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் வரிசையில் “ஜெய் பீம்“ திரைப்படம் முதல் இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்திருக்கிறது. விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் “ஜெய் பீம்“ சில சர்ச்சைகளிலும் சிக்கியது. ஆனால் தற்போது இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் வரிசையில் முதல் இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டு நடிகர் சூர்யா நடித்த “சூரரைப் போற்று“ திரைப்படம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்த நிலையில் தற்போது “ஜெய் பீம்“ முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இரண்டாவது இடத்தில் பிரபல தமிழ் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கிய “ஷெர்ஷா“ திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

மூன்றாவது இடத்தில் பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் சல்மான்கான் இயக்கிய “ராதே“ திரைப்படமும் 4 ஆவது இடத்தில் நடிகர் அக்சய் குமார் நடிப்பில் வெளியான “பெல் பாட்டம்“ திரைப்படமும் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து 5ஆவது இடத்தில் “எட்டர்னல்ஸ்“ திரைப்படமும் 6 ஆவது இடத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான “மாஸ்டர்“ திரைப்படமும் வரிசைக்கட்டி நிற்கின்றன.

இந்நிலையில் 2021 கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் வரிசையில் முதல் இடத்தைப் பிடித்த “ஜெய் பீம்“ படக்குழுவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz