கமல்ஹாசனுக்காக இதை கர்வமாக, கடமையாக செய்கிறேன்: சூர்யா

  • IndiaGlitz, [Thursday,September 05 2019]

உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகில் நடிக்க வந்து 60 வருடம் நிறைவு பெற்றதை அடுத்து இந்த ஆண்டு முழுவதும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசன் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை ஒரு ரசிகனாக நடிகர் சூர்யா தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து சூர்யா கூறியதாவது: நீங்கள் நடிக்க வந்து 60 ஆண்டுகளை குறிக்கும் வகையில் ஒரு இணையதளம் தயாரிக்கப்பட்டுள்ளது. உங்களை அண்ணா என்று அழைப்பதா? சித்தப்பா என்று அழைப்பதா? என்ற குழப்பம் எனக்கு இருக்கும். ஆனால் இந்த இணையதளத்தை எல்லா ரசிகர்களுடன் சேர்ந்து ஒரு ரசிகனாக வெளியிடுவதை ஒரு கர்வமாக, உரிமையாக, கடமையாக நான் பார்க்கின்றேன். இந்த வாய்ப்பளித்த உங்களுக்கும் இந்த இணையதளத்தை தயாரித்த அனைவருக்கும் எனது நன்றிகள் என சூர்யா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார்.

மேலும் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியபோது, ‘அன்பு அண்ணன் கமல்ஹாசன் அவர்களின் கலைக்குடும்பத்திலும் ரசிகக்குடும்பத்திலும் ஒருவனான எனக்கு அவரின் கலையுலக பயணத்தின் 60வது ஆண்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தை வெளியிடும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் பெருமகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

https://ikamalhaasan.com/

More News

மலேசிய அமைச்சருக்கு ஜோதிகா எழுதிய நன்றிக் கடிதம்! 

ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படத்தை பார்த்து மலேசிய அமைச்சர் மாஸ்லே பின் மாலிக் என்பவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாராட்டு தெரிவித்தார் என்பது தெரிந்ததே.

சந்தானம் நடிக்கும் மூன்று வேட படத்தின் டைட்டில் அறிவிப்பு

முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாக புரமோஷன் பெற்று வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவது யார்? 

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கவின், முகின், லாஸ்லியா, ஷெரின் மற்றும் சேரன் ஆகிய 5 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். எனவே எவிக்சன் பட்டியலில் உள்ள

பிகில் டீசர், டிரைலர் எப்போது? பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வருவது

எனக்கு இந்த வீட்ல யாரும் வேண்டாம், நான் போறேன்: கதறியழும் ஷெரின்

வனிதா பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆனபின்னர் அபிராமி, சாக்சி, மதுமிதா என ஒவ்வொருவரையும் உசுப்பேற்றி மக்களின் கோபத்திற்கு ஆளாக்கி, வெளியேற்றிவிட்டார்.