சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு: ரசிகர்களுக்காக பதிவு செய்த டுவிட்!

  • IndiaGlitz, [Monday,February 08 2021]

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த போதிலும் இன்னும் கொரோனா வைரஸ் முற்றிலும் நீங்கவில்லை என்பதும் ஆங்காங்கே இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ் திரையுலகில் ஏற்கனவே பல பிரபலங்களுக்கு கொரோனா வைரஸ் பாத்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவல் நேற்று இரவு முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்பதை உறுதி செய்த சூர்யா தற்போது சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாக தனது ரசிகர்களுக்கு விளக்கமளித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது: ’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.

சூர்யாவின் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் திடீரென அவருக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் படக்குழுவினர்களையும் அதிர்ச்சியை அளித்துள்ளது