அப்பாவின் மனதை மாற்றியதற்கு நன்றி: பிரபல நடிகை குறித்து டுவிட் செய்த சூர்யா!

  • IndiaGlitz, [Thursday,October 29 2020]

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் ஓடிடியில் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது என்பது ஏற்கனவே அறிந்ததே. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் இந்த டிரைலருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான திரைப் படமாக இந்தப் படம் இருக்கும் என்று அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு உள்ளது

இந்த நிலையில் ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் டிரைலரை பார்த்து விட்டு பிரபல நடிகை லட்சுமி மஞ்சு தனது டுவிட்டரில் இந்த படத்தை தீபாவளி என்று பார்ப்பதற்காக மிகவும் காத்திருக்கின்றேன் என்றும் இந்த வருடம் தீபாவளி மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்

இதற்கு பதிலளித்துள்ள நடிகர் சூர்யா அனைத்து பெருமையும் உங்களுக்கே சேரும் என்றும், இந்த படத்தில் உங்கள் தந்தை மோகன்பாபு அவர்களின் மனதை மாற்றி அவரும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள செய்த உங்களுக்கு மிகவும் நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சூர்யாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது

More News

சசிகுமாரின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள்: தியேட்டரில் ரிலீஸா?

பிரபல நடிகர் இயக்குனர் சசிகுமார் நடிப்பில் உருவான 'நாடோடிகள் 2' திரைப்படம் இந்த ஆண்டு வெளியான நிலையில் தற்போது அவர் ஐந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்திய அணியில் இடமில்லை என்றால் எங்கள் நாட்டிற்கு வாருங்கள்: சூர்யகுமார் யாதவ்வுக்கு அழைப்பு

நேற்று நடைபெற்ற பெங்களூர் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தியாவிற்கு சவுதி கொடுக்கும் தீபாவளி பரிசு… வயிறு எரிந்து சாகும் பாகிஸ்தான்…

சவுதி அரேபியாவின் போக் ஆர்வலர் இந்தியாவிற்கு தீபாவளி பரிசு எனக் குறிப்பிட்டு ஒரு உலக வரைபடத்தை ட்விட்டரில் பதிவிட்டு  உள்ளார்.

ஊனமாக நடித்து பிச்சை எடுத்த பெண்மணி… சொத்து மதிப்பை கேட்டு வாயை பிளந்த போலீசார்!!!

எகிப்து நாட்டில் வீல்சேரில் அமர்ந்து பிச்சை எடுக்கும் பெண்மணி ஒருவருக்கு 5 மாடிக்கொண்ட ஒரு அடுக்குமாடி கட்டிடம் ஒன்று

பிசாசு என்று  சித்தரிக்கப்பட்ட அதிபர்… கேலிச் சித்திரத்தால் வெடித்த சர்ச்சை!!!

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாமிய மதத்தின் புனிதராகக் கருதப்படும் நபிகள் நாயகத்தை கேலிச் சித்திரமாக வெளியிட்டு இருந்தது சார்லி ஹெக்டே எனும் பத்திரிக்கை.