கோழிக்கோடு விமான விபத்து குறித்து நடிகர் சூர்யாவின் டுவீட்

  • IndiaGlitz, [Tuesday,August 11 2020]

கடந்த சில நாட்களுக்கு முன் கோழிக்கோடு விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று தரையிறங்கிய போது எதிர்பாராத வகையில் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த விமானத்தை ஓட்டிய பைலட்டுகள் இருவர் உள்பட 19 பேர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த விமான விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக வேண்டியும் திரையுலக பிரமுகர்கள் உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவுகளை செய்து வந்தனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து ஒரு பதிவு செய்துள்ளார். விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, காயமடைந்தவர்கள் விரைவாக குணமாக பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார்.

மேலும் விமான விபத்து நடந்த பகுதியில் உள்ள மலப்புரம் மக்கள் செய்த உதவிக்கு தனது வணக்கங்கள் என்று கூறிய அவர், பயணிகளை காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரையே கொடுத்த பைலட்டுகள் மரியாதைக்குரியவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். சூர்யாவின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

தமிழக டாஸ்மாக்கில் இனி கடனாகக்கூட மதுவாங்க முடியும்… அதிரடி காட்டும் புதுவசதி!!!

சென்னை உயர்நீதிமன்றம் தமிழக டாஸ்மாக் கடைகளில் மின்னணு விற்பனை முறையை கொண்டுவர வேண்டும் என கடந்த மே மாதத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது

'சென்னை 28' பட நடிகரின் தந்தைக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் பாதித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

'மாஸ்டர்' படத்தின் மாஸ்டருக்கும் டப்பிங் செய்த விஜய் சேதுபதி? பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் தெரிந்ததே 

மொட்டை ராஜேந்திரனின் பழைய புகைப்படம்: இணையத்தில் வைரல் ஆவது ஏன்?

தமிழ் சினிமாவில் வில்லத்தனத்துடன் கூடிய காமெடி கேரக்டரில் நடித்து வரும் மொட்டை ராஜேந்திரனின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது 

தோனி மகள் மடியில் இருக்கும் குழந்தை: வைரலாகும் புகைப்படம்!

தல தோனியின் மகள் ஷிவா மடியில் இருக்கும் குழந்தையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கடந்த சில மணி நேரங்களாக வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது