close
Choose your channels

ஆஸ்கார் கமிட்டியின் அழைப்பு: சூர்யா பதிவு செய்த டுவிட் வைரல்!

Thursday, June 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்கர் விருது வழங்கும் அகடாமி சமீபத்தில் புதிய உறுப்பினர்களை இணைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது என்பதும் 394 பேருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு பட்டியலில் தமிழ் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை கஜோல் பெயர்கள் இடம் பெற்றிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஆஸ்கர் அகடமியின் அழைப்பு சூர்யாவுக்கு கிடைத்ததை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, உலகநாயகன் கமல்ஹாசன் உள்பட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஆஸ்கர் கமிட்டியின் அழைப்பு குறித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ஆஸ்கர் கமிட்டியின் அழைப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றும் எனக்காக வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றி என்றும் உங்கள் அனைவரையும் பெருமைப்பட வைக்கும் அளவுக்கு செயல்படுவேன் என்றும் கூறியுள்ளார். சூர்யாவின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரை போற்று’ திரைப்படம் ஆஸ்கர் விழாவுக்கு அனுப்பப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த படம் இறுதி செய்யப்பட்ட 366 படங்களில் ஒன்றாக இருந்து அதன்பின் வெளியேறியது. அதேபோல் சூர்யாவின் ’ஜெய்பீம்’ திரைப்படம் ஆஸ்கர் கமிட்டியின் யுடியூப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.