close
Choose your channels

 'வாடிவாசல்' படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டாரா வெற்றிமாறன்? வைரல் புகைப்படங்கள்

Sunday, March 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று ‘வாடிவாசல்’ படத்தின் டெஸ்ட் படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் அருகே நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.

‘வாடிவாசல்’ படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள நூற்றுக்கணக்கான காளைகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் சில காளைகளுடன் சூர்யா பயிற்சி பெற்றதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் இன்று சென்னை ஈசிஆர் அருகே ‘வாடிவாசல்’ படத்தின் டெஸ்ட் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன் உள்பட படக்குழுவினர் மற்றும் நிஜ ஜல்லிக்கட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.

சூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அமீர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.