close
Choose your channels

சிம்ரன் உட்பட போட்டியாளர்களுக்கு வாழ்த்து.. சூர்யாவின் தாராள மனதை பாராட்டும் ரசிகர்கள்..!

Wednesday, April 30, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ என்ற திரைப்படம் நாளை, அதாவது மே ஒன்றாம் தேதி, வெளியாக உள்ள நிலையில், அதே தேதியில் வெளியாகும் இரண்டு படங்களில் நடித்த சிம்ரன் உட்பட தனது போட்டியாளர்களுக்கு சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அவரது தாராள மனதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘ரெட்ரோ’ திரைப்படம் நாளை பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான முன்பதிவில் மட்டுமே, 5 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், முதல் நாள் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நாளை ‘ரெட்ரோ’ படத்துடன் சசிகுமார், சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ மற்றும் நானி நடித்த ‘ஹிட் 3’ திரைப்படங்களும் வெளியாகவுள்ளது. இதனை அடுத்து, சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் ‘டூரிஸ்ட் பேமிலி’ மற்றும் ‘ஹிட் 3’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ‘சசிகுமார், சிம்ரன் மற்றும் நானி உள்பட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்’ என்றும், ‘’ரெட்ரோ’ உட்பட மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வெற்றி பெற என் வாழ்த்துக்கள்’ என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் படம் ரிலீஸ் ஆனாலும், அவர்களை தங்களது போட்டியாளர்களாக கருதாமல், அனைவரது படங்களும் ஓட வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்த சூர்யாவின் நல்ல மனதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment