மாறி மாறி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் வனிதா-சூர்யாதேவி

வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் திருமணம் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திரையுலகினர் ஒருசிலரும், சூர்யா தேவி என்ற பெண்ணும் பேசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூர்யா தேவி மீது வனிதா விஜயகுமார் காவல்துறையில் புகார் அளித்தார். தனது திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சூர்யாதேவி விமர்சித்து வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வனிதா விஜயகுமார் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது வனிதா மீது சூர்யாதேவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னைப்பற்றி வனிதா விஜயகுமார் அவதூறாக பேசியதாக வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே வனிதா திருமணம் குறித்து பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ்க்கு எதிராக தங்கள் உயிரையும் பணயம் வைத்து காவல் துறையினர் போராடி வருகின்றனர். இந்த நிலையில் வனிதா விஜயகுமாரின் திருமணம் குறித்தும் அதன் பின்னர் எழுந்த சர்ச்சை குறித்தும் மாறி மாறி காவல் துறையில் புகார் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.