ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யகுமார் யாதவ்… முதல் போட்டியில் இந்தியா திரில் வெற்றி!

நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டியில் படு சொதப்பலாக விளையாடிய இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை தந்திருக்கிறது.

நியூசிலாந்துக்கு எதிரான 3 டி20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிக்கொண்ட தொடரை இந்திய கிரிக்கெட் அணியினர் விளையாடி வருகின்றனர். மேலும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் ரோஹித் சர்மா கேப்டன்சியில் நடைபெறும் முதல் போட்டி என்பதால் ரசிகர்களிடையே அதிகளவு எதிர்ப்பார்ப்பு இருந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டிம் சவுதி தலைமையில் விளையாடிய நியூசிலாந்து வீரர்கள் 20 ஓவர் முடிவில் 164 ரன்களை குவித்திருந்தனர்.

இதையடுத்து இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா கூட்டணி களம் இறங்கியது இதில் கே.எல். ராகுல் 15 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தார். அதைத்தொடர்ந்து ரோஹித் சர்மா நிதானமாக விளையாடி 36 பந்துகளுக்கு 48 ரன்களைக் குவித்திருந்தார். அடுத்து வந்த சூர்யா குமார் நேற்றைய போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 40 பந்துகளுக்கு 3 சிக்ஸர், 6 பவுண்டரி என 62 ரன்களைக் குவித்து இந்திய அணியை வலுப்படுத்தி இருந்தார்.

அதைத்தொடர்ந்து களம் இறங்கிய ஷ்ரேயாஸ் தடுமாற 1 ஓவரில் இந்தியா 10 ரன்களை எடுக்க வேண்டி இருந்தது. இதனால் அடுத்து களம் இறங்கிய வெங்கடேஷ் ஐயர் ஒரு பவுண்டரி கொடுத்து அவுட்டானார். தொடர்ந்து களம் இறங்கிய பண்ட் ஒரு பவுண்டரி எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதிச்செய்தார்.

இதனால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது. மேலும் இரு அணிகளிலும் இளம் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருவதால் இந்தத் தொடர் மீது ரசிகர்கள் அதிக ஆர்வத்தைக் காட்டிவருகின்றனர்.

More News

பிறந்தநாளில் வெளியான நயன்தாராவின் புதிய பட அறிவிப்பு!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏய் வாயை மூடு, என்ன நக்கலா? தாமரை - இசைவாணி மோதல்!

பிக்பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்றுவரும் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்கில், கண்ணாடி மற்றும் அதன் பிரதி பிம்பங்களாக நடித்து வருபவர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்தோம்

முதல் முறையாக ரோஹித், டிராவிட் கூட்டணி… நியூசிலாந்துடன் மோதும் இந்தியா!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிவரை

சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது ஏன்? அன்புமணிக்கு விளக்கம் அளித்த இயக்குனர்கள் சங்கம்!

நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாமக எம்பி அன்புமணி  அவர்கள் சூர்யாவை விமர்சனம்

விஜய்சேதுபதியை தாக்கினால் ரூ.1001: மிரட்டல் விடுத்த பிரபல அரசியல்வாதி மீது வழக்குப்பதிவு!

நடிகர் விஜய் சேதுபதியை தாக்கினால் ரூ.1001 பரிசு அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்ட இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை காவல்துறை அறிவித்துள்ளது.