டவுட்டே வேணாம், உங்களை பழிவாங்கத்தான் போறேன்: 'கென்னடி கிளப்' டீசர் விமர்சனம்

  • IndiaGlitz, [Saturday,May 25 2019]

'கனா' திரைப்படத்தின் வெற்றி, விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படங்களை குறிப்பாக பெண்கள் விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படங்களை இயக்க பலர் முன்வந்துள்ளனர். அவற்றில் 'தளபதி 63' மற்றும் 'கென்னடி கிளப்' ஆகிய படங்களும் அடங்கும். இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள 'கென்னடி கிளப்' திரைப்படத்தின் டீசர் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

பெண்கள் கபடி அணியின் பயிற்சியாளராக சசிகுமார் நடித்துள்ளார். அவரது டீம் சர்வதேச கபடி போட்டியில் வெற்றி பெற்றதா? என்ற கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளது தெரிகிறது. ஆங்காங்கே ஆவேசமான வசனங்கள். குறிப்பாக 'கபடி, இந்தியாவின் பாரம்பரியான விளையாட்டு. லாஸ்ட் 25 இயர்ஸ்ஸா இண்டர்நேஷனல் லெவல்ல நாமதான் சாம்பியன்' என்ற வசனமும், 'கடைசி தீக்குச்சியை கொளுத்தும்போது இருக்குற கவனம் முதல் குச்சியை கொளுத்தும்போதே இருக்கணும்: அப்பதான் நாம ஜெயிக்க முடியும்' என்ற என்ற வசனமும் மாஸ்

சசிகுமாரின் 'கெத்து' நடிப்பு, பாரதிராஜாவின் வழக்கமான உணர்ச்சிகரமான நடிப்பும் இந்த படத்திலும் மிஸ் ஆகவில்லை.

கபடிப்போட்டியில் ஸ்டண்ட் காட்சிகளையும் இணைத்திருப்பார்கள் போல் தெரிகிறது. அதேபோல் ஆண்கள் ஒரு அணியிலும் பெண்கள் ஒரு அணியிலும் விளையாடும் வித்தியாசமான கபடி போட்டியையும் இந்த டீசரில் பார்க்க முடிகிறது. மொத்தத்தில் 'வெண்ணிலா கபடிக்குழு' போல் மீண்டும் ஒரு விறுவிறுப்பான விளையாட்டு படத்தை இயக்குனர் சுசீந்திரன் கொடுத்திருக்கின்றார்.

டி.இமானின் பின்னணி இசை படத்திற்கு பலமாக உள்ளது. குருதேவ் ஒளிப்பதிவில் கபடிக்காட்சிகள் அனல் பறக்கின்றது.

More News

ஜெயிச்ச மறுநாளே விவசாயக்கடன் தள்ளுபடியா? கன்னியாகுமரி எம்பி அதிர்ச்சி

நடைபெற்று முடிந்த 17வது மக்களவை தேர்தலில் தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சரும், பாஜகவின் முக்கிய தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனை வீழ்த்தியவர் எச்.வசந்தகுமார்.

சூர்யாவின் என்.ஜி.கே: தமிழ் சினிமாவில் செய்த முதல் சாதனை

100 வருட தமிழ் சினிமாவில் வரும் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகும் சூர்யாவின் 'என்.ஜி.கே' திரைப்படம் ஒரு புதிய சாதனையை செய்துள்ளது. 

ஓ இதுதான் தமிழ் மண்ணா? பாஜக வெறுப்பாளர்களை வெறுப்பேற்றிய எஸ்.வி.சேகர்

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், கேரளம் தவிர இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி வாகை சூடியுள்ளது.

இனிமேலும் நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பார்களா?

திரையுலகில் சூப்பர் ஸ்டார்களாக இருந்தாலும் அரசியலில் பல நடிகர்கள் ஜீரோவாகி போனதால் இனிமேலும் நடிகர்களுக்கு முதல்வர் ஆசை வராது என்றே கணிக்கப்படுகிறது.

சிம்புவுக்கு அவரது தாயார் பார்த்த மணப்பெண்: விரைவில் திருமணம்

சிம்புவின் சகோதரர் குறளரசனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் விரைவில் சிம்புவுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகவும், அவருக்கான சரியான பெண்ணை தாங்கள் பார்த்து கொண்டிருப்பதாகவும் டி.ராஜேந்தர் .