சுசீந்திரன் -மிஷ்கின் பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,December 07 2017]

பிரபல இயக்குனர் சுசீந்திரன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் டைட்டில் மற்றும் இயக்குனர் குறித்த விபரங்கள் இன்று மாலை வெளியாகும் என்று வெளிவந்த அறிவிப்பை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே போக்கிரி ராஜா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

கல்பத்ரு பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த் ஆகிய மூவரும் மூன்று முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளது.