'வெண்ணிலா கபடிக்குழு 2' படத்தில் விஜய் சகோதரர்

  • IndiaGlitz, [Sunday,November 27 2016]


பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய முதல் படமான 'வெண்ணிலா கபடிக்குழு' மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கவுள்ளது.
முதல் பாகத்தின் நாயகனாக விஷ்ணு நடித்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்யின் சகோதரரும் பிரபல நடிகருமான விக்ராந்த் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் கதை, திரைக்கதையை சுசீந்திரன் எழுத, அவருடைய உறவினர் செல்வசேகரன் இயக்கவுள்ளார்.
இந்த படமும் கபடி விளையாட்டை மையமாக கொண்டு உருவாக உள்ளதாகவும், மேலும் முதல் பாகத்தில் நடித்த ஒருசில நடிகர்கள் இந்த படத்திலும் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வருவதாகவும் அனேகமாக இந்த படத்தில் புதுமுக நாயகி நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், மிகவிரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

விஜய்யிடம் பாராட்டு பெற்ற 'பைரவா' ஸ்டண்ட் இயக்குனர்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விடிய விடிய நடந்த பொதுக்குழு முன்னேற்பாடுகள் மண்வெட்டியை தூக்கிய விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு லயோலா கல்லூரியில் இருந்து தி.நகரில் உள்ள நடிகர் சங்கத்தின் சொந்த இடத்தில் மாற்றப்பட்டுள்ளது குறித்து ஏற்கனவே நேற்று பார்த்தோம்

பார்த்திபன் இயக்கத்தில் அஜித்-விஜய்-ஜெயம்ரவி?

பார்த்திபனின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோடிட்ட இடங்களை நிரப்புக' திரைப்படம் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தான் அஜித், விஜய் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் பொருத்தமான கதை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை' இசையால் நிரப்பிய சத்யா

ஒரு திரைப்படத்தின் கதையையும் காட்சிகளையும் பார்வையாளனின் மனதில் விதைக்கும் வகையில் கொண்டுபோய் சேர்ப்பது பின்னணி இசை என்று கூறினால் மிகையாகாது

கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' மீண்டும் தொடங்குவது எப்போது?

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த மே மாதம் 'சபாஷ் நாயுடு' என்ற படத்தை தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் என்ற மூன்று மொழிகளில் தொடங்கினார்.