சுசீந்திரனின் 'மாவீரன் கிட்டு' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,October 25 2016]

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் இயக்குனராக சுசீந்திரன் அதன் பின்னர் நான் மகான் அல்ல', 'அழகர்சாமியின் குதிரை', 'பாண்டிய நாடு', உள்பட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் தற்போது இயக்கி வரும் 'மாவீரன் கிட்டு' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் இசைவெளியீடு வரும் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் பார்த்திபன் நடிக்கவுள்ளார். நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வர்டம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மீண்டும் இணையும் 'ஆண்டவன் கட்டளை' ஜோடி

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ரித்திகாசிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஆண்டவன் கட்டளை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த வெற்றி ஜோடி மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

'தானா சேர்ந்த கூட்டம்' ரீமேக் படமா? தயாரிப்பாளர் விளக்கம்

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் நாயகி கீர்த்திசுரேஷ் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பில் வரும் நவம்பரில் சூர்யா இணைந்து கொள்வார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

அஜித், விஜய், சிவகார்த்திகேயன், திருமணம் குறித்து த்ரிஷா

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேல் முன்னணி நாயகியாக விளங்கி வரும் நடிகை த்ரிஷா...

தனுஷின் 'பவர்பாண்டி' படத்தில் இணைந்த பிரபல நடிகை

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களில் ஜொலித்து வந்த தனுஷ் தற்போது இயக்குனர் துறையிலும் காலடி எடுத்து வைத்து இயக்கி கொண்டிருக்கும் படம் 'பவர் பாண்டி'...

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் குஷ்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்...