ரஜினி-கமல் டைட்டிலில் இளமையுடன் களமிறங்கும் சுசீந்திரன்

  • IndiaGlitz, [Saturday,July 29 2017]

'வெண்ணிலா கபடிக்குழு' முதல் 'மாவீரன் கிட்டு' வரை பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன். இவரது படத்தில் பெரிய ஸ்டார் இருக்க மாட்டார்கள், ஆனால் கதையே பெரிய ஸ்டாராக இருக்கும்.

அந்த வகையில் மீண்டும் முழுக்க முழுக்க புதுமுகங்களுடன் ஒரு படத்தை வலிமையாக கதையுடன் இயக்க தயாராகிவிட்டார் சுசீந்திரன். கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா நடித்த வெற்றிப்படமான 'இளமை ஊஞ்சலாடுகிறது' என்ற டைட்டிலை தேர்வு செய்துள்ள சுசிந்திரன் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டதாக செய்திகள் உறுதி செய்துள்ளன.

ஏற்கனவே சுசீந்திரன் இயக்கி முடித்துள்ள 'அறம் செய்து பழகு' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருவதாகவும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

கன்னடத்தில் ரீமேக் ஆகும் அருண்விஜய்யின் வெற்றி படம்

கோலிவுட் திரையுலகில் ஒரு நல்ல பின்னணி இருந்தும் அருண்விஜய் ஒரு வெற்றிகரமான நடிகராக பல வருடங்களாக கடுமையாக முயற்சியில் ஈடுபட்டு வந்தார்...

நயன்தாரா, த்ரிஷா பாணிக்கு திரும்பும் வரலட்சுமி

கோலிவுட் திரையுலகில் கடந்த பல வருடங்களாக நாயகிகள், கவர்ச்சி மற்றும் ஹீரோக்களுடன் டூயட் பாடுவதற்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தார்கள்...

'விவேகம்' ரசிகர்களுக்கு ஒரு விசேஷ செய்தி

தல அஜித் படம் என்றாலே அன்று ஒரு சிறப்பு தீபாவளி போல் அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் அந்த விசேஷமான நாள் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரவுள்ளது...

வேண்டியதோர், வேண்டாதோர் இல்லை: சர்ச்சைகளுக்கு பதில் சொல்லும் கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை முதல் ஒருசில நாட்கள் இது 'ஸ்க்ரிப்ட்தான்' என்று பலர் குற்றஞ்சாட்டி வந்தனர். ஒரு நிலைக்கு மேல் சுவாரஸ்யமாக அனைவரும் நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தவிட்டதால் இந்த 'ஸ்கிரிப்ட்' பிரச்சனை மறந்துவிட்டது....

பிக்பாஸ் விவகாரம்: சறுக்கியது ஜூலி மட்டுமா?

பட வாய்ப்புகள் இல்லாமல் ஓரமாக இருந்த ஓவியாவை அழைத்து வந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற வைத்த அந்த தொலைக்காட்சி, தற்போது அவருக்கு கிடைத்திருக்கும் புகழ் காரணமாக லேசாக அதிர்ச்சி அடைந்துள்ளதோ என்று எண்ண தோன்றும் அளவுக்கு நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்தது...