ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பத்திற்கு மாறாக வெளியாகும் சுஷாந்த்சிங்கின் கடைசி படம்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் மறைவு பாலிவுட் திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அவர் நடித்து முடித்துள்ள கடைசி திரைப்படமான ’Dil Bechara’ என்ற திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சுஷாந்த்சிங் மறைவு காரணமாக அவருடைய கடைசி படமான ’Dil Bechara’ படத்தை முதலில் பெரிய திரையில் மட்டுமே வெளியிட வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரசிகர்களின் இந்த கோரிக்கையை இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களும் தனது டுவிட்டரில் முன்மொழிந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சுஷாந்த்சிங் கடைசி படமான ’Dil Bechara’ திரைப்படம் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களும் தனது டுவிட்டரில் சற்றுமுன் உறுதி செய்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சுஷாந்த்சிங் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் ’Dil Bechara’ படத்தை பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சீன பொருட்களை தெருவில் எறிந்து, தீயிட்டு கொளுத்திய தமிழ் இயக்குனர்!

சமீபத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீன மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன வீரர்கள்

டெஸ்ட் போட்டிகளில் கடந்த 50 ஆண்டுகளில் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் இவர்தான்!!!

கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடை பெறவில்லை.

டாம் குரூஸ் - விஜய் இடையே இருக்கும் அபூர்வ ஒற்றுமை!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் அவர்களுக்கும் தளபதி விஜய் அவர்களுக்கும் இடையே ஒரு அபூர்வ ஒற்றுமை இருப்பதாக சமூகவலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை அதிபர் தற்கொலை: கொரோனாவால் விபரீத முடிவு

தமிழகத்தில் கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தினமும் தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால்

கொரோனா விஷயத்தில் புது நம்பிக்கை: மனிதர்கள்மீது புது கொரோனா தடுப்பு மருந்து சோதனை!!!

கொரோனா நோய்த்தொற்று அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகில் பல நாடுகளுக்கும் பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.