உங்க வேலை எதுவோ அதை பாருங்க: 56 வயது நபருடன் உறவு குறித்து நடிகையின் விளக்கம்

  • IndiaGlitz, [Friday,July 15 2022]

56 வயதான முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடியுடன் நெருக்கமாக இருப்பதாக நடிகை சுஷ்மிதாசென் குறித்த செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்த அவர் ’உங்கள் வேலையை பாருங்கள்' என்று நடிகை சுஷ்மிதா சென் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை சுஷ்மிதாசென் உடன் டேட்டிங்கில் இருப்பதாக முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் கூடிய பதிவு செய்தார். இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று வதந்தி பரவியது.

இந்த நிலையில் இது குறித்து சற்று முன்னர் நடிகை சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் ’நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன், திருமணம் செய்யவில்லை, மோதிரங்கள் மாற்றவில்லை, எந்தவித நிபந்தனையுமின்றி அன்பால் சூழப்பட்டு இருக்கிறேன்'.

ஏற்கனவே போதுமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்போது நான் மீண்டும் எனது அன்றாட பணிக்கு திரும்பியுள்ளேன். எப்போதும் என் மகிழ்ச்சியில் பங்கு கொள்பவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மற்றவர்களுக்கு NOYB (None of your business) உங்கள் வேலை எதுவோ அதை பாருங்கள் என்று கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

'மேகம் கருக்காதா', தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' சிங்கிள் பாடல்: எழுதி பாடியது யார் தெரியுமா?

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' என்ற திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்ற 'தாய்க்கிழவி' என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

'தேஜாவு' படத்தை அடுத்து அருள்நிதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுவா?

அருள்நிதி நடித்த 'டி பிளாக்' என்ற திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி ரிலீஸ் ஆன நிலையில் ஜூலை 22ஆம் தேதி அவர் நடித்த 'தேஜாவு' என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரபல இயக்குனர்: வைரல் புகைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலில் விழுந்து பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ஆசி பெற்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. 

56 வயது ஐபிஎல் பிரபலத்துடன் டேட்டிங் செய்யும் நடிகை சுஷ்மிதா சென்: புகைப்படங்கள் வைரல்!

முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடியுடன் பிரபல நடிகை சுஷ்மிதா சென் டேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அதிரடி ஸ்டண்ட் காட்சிகளுடன் வெளியான சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 22' டைட்டில்;  வீடியோ வைரல்

சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' மற்றும் 'அயலான்' ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு திரைப்படத்தின் டைட்டில் வீடியோ