close
Choose your channels

'சுட்டுப்பிடிக்க உத்தரவு' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Saturday, May 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ராந்த், மிஷ்கின், சுசீந்திரன் நடிப்பில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கிய திரைப்படம் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியது.

இந்த நிலையில் இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்வது போல் ரிலீஸ் தேதியுடன் ஒரு போஸ்டரையும் படக்குழுவினர் இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

விக்ராந்த் ஜோடியாக அதுல்யாரவி நடித்திருக்கும் இந்த படத்தில் இரண்டு முக்கிய வேடங்களில் இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையில் சுஜித் சராங் ஒளிப்பதிவில் ராமராவ் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை கல்பத்ரு பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.